Sunday 5 December 2021

இவர்கள் என்ன காட்டுமிராண்டிகளா?

 

                                                                        Priyantha Diyawadana
பாக்கிஸ்தானில், சியால்கோட்டில் அமைந்துள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த ஸ்ரீலங்கா பிரஜை ஒருவர் கொடூரமான  முறையில் சித்திரவதை செய்யப்பட்டு, எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் உலகெங்கிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

பாக்கிஸ்தானில் இப்படி நடப்பது இது ஒன்றும் முதல் சம்பவம் அல்ல. இதற்கு முன்னரும் பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன.

ஒரு வேளை இவர் வெளிநாட்டினராக இருக்கலாம். ஆனால் உள்நாட்டினரையும் அவர்கள் இப்படித்தான் பலரைக் கொலை செய்திருக்கின்றனர். எப்படி?

இவர்கள் செய்கின்ற தவறுகளுக்கு மற்றவர் மேல் பழிபோட்டு அதற்கு மத சாயம் பூசுவது இவர்களுக்குக் கை வந்த கலை!

பெரும்பாலும் இவர்கள் கிறிஸ்துவர்கள் மேலும் இந்துக்கள் மேலும் பழி போடுவது என்பது எப்போதுமே உண்டு.  யாரோ ஒருவருக்கு யாரோ ஒருவர் மேல் பகை. அவரை முடித்துவிட வேண்டும். அதற்கு இவர்கள் கையில் எடுக்கும் ஆயுதம் சமயம். அவர் எங்கள் புனித நூலை எரித்துவிட்டார், அவமானப்படுத்தி விட்டார், கிழித்து எறிந்தார், காலால் மிதித்து விட்டார் - இப்படி பல குற்றச்சாட்டுகளை பிற சமயத்தினர் மீது சுமத்துவது இவர்களின் இயல்பு!  அது எப்போதும் தொடர்ச்சியாகவே நடந்து வருவது தான்!

ஒன்றை நினைத்துப் பார்த்தால் அது எப்படி சாத்தியமாகும் என்று நமக்குத் தோன்றும். தொண்ணூறு விழுக்காடுக்கும் மேல் இஸ்லாமியர்கள் வாழும் ஒரு நாட்டில் பிற சமயத்தினர் எப்படி இஸ்லாமியர்களின் புனித நூலை அவமதிக்க முடியும்? இது எப்படி சாத்தியமாகும்? நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை!

ஸ்ரீலங்கா பிரஜையான கொல்லப்பட்ட மனிதர் படிக்காத பரதேசியா?  ஏன் படிக்காதவன் கூட அப்படி ஒரு தவறை செய்ய வாய்ப்பில்லை! படித்த மனிதர்.  சமயம் என்பது எத்துணை உணர்ச்சியைத் தூண்டக்கூடியது என்பதை அறியாதவரா?  வெளிநாடு ஒன்றில் வேலை செய்பவர். அந்த நாட்டின் சமயத்தின் மீது அவதூறு பேசினால் என்ன ஆகும் என்பதைப் புரியாதவரா?

இவர்களாகவே ஏதோ ஒரு தவறைச் செய்துவிட்டு பிறகு சர்வ சாதாரணமாக "எங்கள் சமயத்தை அவமதித்துவிட்டார்!" என்று கூறி கொலை செய்வது - இதையெல்லாம் எப்படி ஏற்றுகொள்வது? 

காட்டுமிராண்டிகளுக்குக் கூட நீதி, நியாயம் உண்டு! அவர்களும் சட்டதிட்டங்களைப் பின் பற்றுகிறார்கள்! ஆனால் இந்த பாக்கிஸ்தானிய கும்பல்களுக்கு அறிவு எதுவும் இல்லை!

No comments:

Post a Comment