Tuesday 7 December 2021

இன்னொரு மாநில தேர்தல்!

இன்னொரு மாநிலத் தேர்தல் விரைவில் வருகின்றது.

இம்முறை அது சரவாக் மாநிலத் தேர்தல். மிக  சமீபத்தில் மலாக்கா மாநிலத் தேர்தலைக் கண்டோம்.

ஆனாலும் சபா, சரவாக் மாநிலங்கள் என்னும் போது நமக்கு ஏனோ பயத்தை ஏற்படுத்துகிறது!  மலாக்கா மாநிலத் தேர்தல் அப்படி ஒரு பயத்தை ஏற்படுத்தவில்லை.

சபாவில் ஏற்பட்ட அனுபவம் நம்மை இன்னும் பயத்தில் வைத்திருக்கிறது. மலாக்கா மாநிலத் தேர்தல் நடத்தப்பட்ட போது பெரும்பாலான மக்கள் தடுப்பூசி போடப்பட்டிருந்தனர். மேலும் மலாக்காவையும் சரவாக் மாநிலத்தையும் ஒப்பிட முடியாத  அளவுக்கு வித்தியாசங்கள் இருக்கின்றன. 

சரவாக் காடு மேடுகள், மலைகள் அடர்ந்த ஒரு மாநிலம். தடுப்பூசி என்பது எந்த அளவுக்கு போடப்பட்டிருக்கின்றது  என்பது நமக்குத் தெரிய வாய்ப்பில்லை.  நிச்சயமாக முடிந்த அளவு போடப்பட்டிருக்க வேண்டும்.

வாக்களிப்பு என்பது மாநில மக்களைப் பொறுத்தது. அவர்களில் பலர் மேற்கு மலேசியாவில்  வேலை செய்பவர்கள். இவர்கள் இங்கு வரும் போது அங்கிருந்து தொற்று நோயைக் கொண்டு வருவார்களோ என்கிற பயம் இயற்கையாகவே நமக்கு உண்டு!

சென்ற சபா தேர்தலில் கொரோனாவின் தாக்கம் அப்போதைய பிரதமர் முகைதீன் யாசினுக்கு அதிர்ஷ்டத்தைக் கொண்டு வந்தது! அதனால் அவரும் நீண்ட நாள் பிரதமராக இருந்தார்! இப்போது சரவாக்கில் நடக்கும் இந்த தேர்தலில் அப்படி எதுவும் நடக்காது என்று சொல்வதற்கில்லை! இப்போதைய பிரதமருக்கும் அதே போன்ற அதிர்ஷ்டம் தேவைப்படுகிறது! 

கோரோனா தொற்றை நாம் வேண்டாமென்றாலும் இவர்களே இங்கு வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு வந்து விடுவார்கள்! அந்த அளவுக்கு அரசியல்வாதிகள் சக்தி மிக்கவர்கள்!

இப்போதே இன்னும் பல தொழிற்சாலைகள் திறக்கப்படாமல் பலர் வேலையிழந்து நிற்கின்றனர். இந்த நேரத்தில் இவர்களால் இன்னொரு ஊரடங்கு,  சமூக நீதி என்றெல்லாம் பேசிக்கொண்டு இன்னொரு ஊரடங்கைக் கொண்டு வந்தால் மக்களின் நிலை என்ன? அதற்காகத்தான் நாம் பயப்படுகிறோம்!

அரசியல்வாதிகள் சாதாரணமானவர்கள் அல்ல. இருப்பதை இல்லாதது ஆக்கிவிடுவார்கள்! இல்லாததை இருப்பதாக்கி விடுவார்கள்! எந்த ஊரடங்கு வந்தாலும் அவர்கள் வெளிநாடு போவார்கள்! வருவார்கள்! அவர்களுக்கு எல்லா நாட்களிலும் பணம் கொட்டோ என்று கொட்டும்!

ஆனால் சராசரி மனிதன் பரிதாபத்துக்கு உரியவன்.  இன்னொரு ஊரடங்கை நம்மால் தாங்க முடியாது!

அதனால் தேர்தல் வரட்டும்! ஆனால் தேர்தல் ஆணையம் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்!

No comments:

Post a Comment