தமிழ் மாதங்கள இல்லை!
மேலே உள்ள காலண்டரைப் பயன்படுத்தாதவர்கள் யாரும் இல்லை. ஒவ்வொரு வீட்டிலும் வீட்டில் உள்ள ஹாலில் தொங்க விடப்பட்டிருக்கும்.
இதனை நாம் பெரும்பாலும் குதிரைக் காலண்டர் என்று சொல்லுவோம். காரணம் என்றென்று குதிரைப் பந்தயம் நடக்கும் என்பதையறிய மிக எளிதான வழி இந்தக் காலண்டர்கள்.
அப்படி என்றால் குதிரைப் பந்தயம் விளையாடவா நாம் வைத்திருக்கிறோம்? அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. நான்கு நம்பர் குலுக்கல் எப்போது என்பதையறிய மிக எளிதான வழி. குதிரை படம் இருந்தால் அன்று நான்கு நம்பர் குலுக்கல் உண்டு என்பது பொருள்!
அது மட்டும் அல்ல. அரசாங்க விடுமுறைகள், பள்ளி விடுமுறைகள் அனைத்தும் இந்தக் காலண்டரில் உண்டு. மேலும் தினசரி தமிழில் இது என்ன மாதம் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கும். தமிழில் மட்டும் அல்ல, சீன மொழி, அரபு மொழி என்று அனைத்து மொழிகளிலும் மாதங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். இது தான் நடைமுறை. எல்லாக காலங்களிலும் இப்படித்தான் இது நடந்து கொண்டிருக்கிறது. காலண்டர் பணம் போட்டு வாங்க வேண்டியதில்லை. கடைகளில் இலவசமாகவே கிடைக்கும்.
ஆனால் சென்ற ஆண்டு கிடைத்த காலண்டரைப் பார்த்த போது அதிர்ச்சியாக இருந்தது. காரணம் ஒவ்வொரு நாளும் அன்று என்ன தமிழ் மாதம் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். மார்கழி, தை என்று கடைசி மாதம் கார்த்திகை வரை அது போகும். ஆனால் அப்படி இல்லை! ஏதோ தவறு நடந்திருக்கிறது என்று மறந்து போனேன். ஆனால் இந்த ஆண்டும் அதே போல வந்திருக்கிறது! அப்படியென்றால் ஏதோ திட்டமிட்டு இந்த தமிழ் மாதங்கள் தவிர்க்கப்படுகின்றன என்பது தானே பொருள்?
இந்தத் தமிழ் மாதங்கள் நமக்கு ஏன் தேவை என்றால் நமக்குத் தேவை என்னும் போது இந்த காலண்டரிலிருந்து நாம் மிக எளிதாக தெரிந்து கொள்ளலாம். இல்லாவிட்டால் எங்கே தேடி ஓடுவது? நாம் தினசரி ஆங்கில மாதங்களைத் தான் பயன்படுத்துகிறோம். தமிழ் மாதங்களை உயிரோடு வைத்திருப்பதே இந்த காலண்டர்கள் தான்! தேவை என்னும் போது இந்த காலண்டர்களைத் தேடித்தான் ஓடுகிறோம்!
சீன நிறுவனங்களிலிருந்து வருகின்ற காலண்டர்கள் சரியாகத்தான் வருகின்றன. மேற் குறிப்பிட்ட இந்த காலண்டரை வெளியிடுவதே எனக்கு வேண்டியவர் தான்! தன்னுடைய நிறுவனத்திற்காக அவர் வெளியிடுகிறார். எதனையும் சரி பார்ப்பதில்லை. அதன் விளைவு தான் இது! அவர் தனக்குத் தெரிந்த ஓர் இந்திய நபரிடம் ஆர்டர் செய்கிறார். இப்போது நமக்கு என்ன தெரிகிறது? அந்த நபர் தமிழர் இல்லை என்பதாகத்தான் நாம் அனுமானிக்க வேண்டியிருக்கிறது! ஆக, திராவிடம் இங்கும் வந்துவிட்டது!
ஓர் ஆண்டு ஊமையாய் இருந்து விட்டதால் மீண்டும் அதே நிலைமை. இனி இது வராது! நமக்குப் பகைவன் நமது அருகிலேயே! அதனால் ஜாக்கிரதையாக நாம் இருக்க வேண்டியுள்ளது!
No comments:
Post a Comment