Wednesday 15 December 2021

குண்டும் குழியுமான மலேசியர்!

 

ஆசியன் நாடுகளில் மலேசியரே பருமனவானவர்கள் என்பதில் நாம் பெருமை கொள்ளலாம்! ஆமாம், பெருமை படுவதற்கு வேறு என்ன இருக்கிறது? நாம் சாப்பாட்டு ராமான்கள் என்பது தான் பெருமை!

 மலேசியர்கள்  அதிக எடை உள்ளவர்கள் உள்ள ஒரு  நாடு என்று புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. சிங்கப்பூர் எந்த அளவுக்குக் கீழே இருக்கிறது என்று பாருங்கள். 15.6 என்கிற கணக்கில் இருக்கும் நமக்கும் வெறும் 6.1 - ல் இருக்கும் சிங்கப்பூருக்கும் உள்ள வித்தியாசத்தைப் பாருங்கள்.   அப்படியென்றால் நாம் எல்லாம் உழைக்காமல் வெறுமனே "உள்ளே" தள்ளிக் கொண்டிருக்கிறோமோ! அனுதாபம் தான், வேறு என்ன சொல்ல!      

இருந்த இடத்திலிருந்து கொண்டே, ஆடாமல் அசையாமல், வேலை செய்ய வேண்டும்! கை நிறைய சம்பளம் வாங்க வேண்டும்! மேநாட்டுக்காரன்  போல வாழ வேண்டும்! தின்னக் கூடாதது எல்லாம் தின்ன வேண்டும் என்கிற மனநிலையில் இருப்பவர்களுக்கு  யார் என்ன செய்ய முடியும்?

எனக்குக்  "குண்டு" ஒருவரைத்  தெரியும். குண்டு என்றால் அசாதாரணக் குண்டு. வயதுக்கு மீறிய குண்டு!  படுக்கையறையிலிருந்து வெளியே வந்தால் நாற்காலியில் உட்காருவதோடு சரி. இரவு படுக்கைக்குப் போகும் போது தான் அந்த நாற்காலியிலிருந்து வெளியேறுவார்!  வீட்டுக்குள்ளே கூட நடப்பதில்லை!  சமயலறைக்குச் சென்று சமைப்பதில்லை! சோறு போட்டுக் கூட சாப்பிட மூடிவதில்லை! நிற்க முடியாது! நடமாட முடியாது! சாப்பாடு கூட வெளியிலிருந்து தான் அனுப்பப்படுகிறது! சரி! உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்கிறாரா என்றால் அதுவுமில்லை!

இந்த நேரத்தில் எனக்குத் தெரிந்த இருவரைப்பற்றி சொல்லுகிறேன். அக்காள், தம்பி இருவருமே மிக மிக இளம் வயது. ஆனால் இருவருமே சரியான குண்டு பேர்வழிகள்! அவர்களைப் பார்த்து நீண்ட நாள் ஆயிற்று. தீடீரென்று அக்காவைப் பார்க்க நேர்ந்தது. என்னால் அடையாளம் காண முடியாத அளவுக்கு மிகவும் இளைத்துப் போயிருந்தார்! அந்த நேரத்தில் பேச முடியாத ஒரு நெருக்கடி இருந்ததால்  என்னால் பேச முடியவில்லை. இன்னொரு நாள் அவரது தம்பியைப் பார்க்க நேர்ந்தது. அவனை எனக்கு அடையாளம் தெரியவில்லை.  அவனே என்னிடம் வந்த பேசியிராவிட்டால் நான் பேசியிருக்க  மாட்டேன்! அந்த அளவுக்கு மாறிப் போயிருந்தான்! "இது எப்படி...........? சாப்பிடுவதே இல்லையா?" என்று இழுத்தேன்! "சோறு சாப்பிடுவதில்லை! மற்றபடி வெறும் காப்பி குடிப்பேன்!" வேறு ஏதேதோ சாப்பிடுகிறேன் என்று சொன்னான். ஆனால் மருந்து எதுவும் சாப்பிடுவதாகச் சொல்லவில்லை! எல்லாமே "உணவே மருந்து" என்பதைத்தான் கடைப்பிடிக்கிறான்!  எனக்கு அது தேவை இல்லையென்பதால் நான் அதிகம் நோண்டி நோண்டி கேள்விகள் கேட்கவில்லை!

ஆக எனக்குத் தெரிந்ததெல்லாம் உடல் பருமனைக் குறைக்க முடியும். வெறும் ஆங்கில மருந்து வகைகளை கையில் வைத்துக் கொண்டு உடல் பருமனைக் குறைக்க முடியும் என்பதெல்லாம்  உங்கள் பணப்பையின் தொப்பையைத்தான் குறைக்க முடியும்!

உடல் பருமன் என்பது மிகவும் வேதனையான ஒரு விஷயம். குழந்தைகள் உடல் பருமனைக் கொண்டிருந்தால் அவர்களை ஓட விடுங்கள், ஆட விடுங்கள். பயிற்சி செய்ய வையுங்கள்.  இன்றைய குழந்தைகளுக்கு அந்த பாக்கியம் கிடைப்பதில்லை! கையில் கைப்பேசியை வைத்துக் கொண்டு கண்களுக்கு மட்டும் பயிற்சி கொடுக்கிறார்கள்!  அது பயிற்சி அல்ல! கண்களுக்கு அயர்ச்சி! அழற்சி!

இன்று நாம் குழந்தைகளைக் கவனிக்காவிட்டால் நாளைய மலேசியா நோயாளிகளைத்தான் கொண்டிருக்கும்!
                                                                                                                                 

No comments:

Post a Comment