தென்னாப்ரிக்கா நாட்டைச் சேர்ந்த 19 வயது மாணவி ஒருவர் கடந்த 19 நவம்பர் அன்று நாட்டுக்குள் வந்த போது அவர் இரத்தம் பரிசோதிக்கப்பட்டு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. அவர் இரத்தத்தில் ஓமிக்ரோன் வைரஸ் தாக்கப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த மாணவி ஈப்போவில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவி ஆவர்.இதுவே நாட்டின் முதல் ஓமிக்ரோன் சம்பவமாகும்.
இந்த மாதம், டிசம்பர் 1 லிருந்து வெளிநாடுகள், குறிப்பாக எட்டு ஆப்பிரிக்க நாடுகள், தற்காலிமாக நாட்டுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என மலேசியா அறிவித்திருக்கிறது. அத்தோடு இன்னும் சில நாடுகளும் இதில் அடக்கம்.
எப்போதும் அமரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி என்று மேற்கே பார்த்துக் கொண்டிருந்த நமக்கு இப்போது ஆப்பிரிக்க நாடுகள் மீது உலகம் திரும்பிப் பார்த்துக் கொண்டிருக்கிறது! ஆனால் உயிர் இழப்புக்கள் என்னவோ மேற்கு நாடுகளிலிருந்து தான் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
மேலும் மேற்கு நாடுகளில் தான் தடுப்பூசிக்கான எதிர்ப்பு இயக்கங்கள் அதிகரித்துக் கொண்டு வருகின்றன. அதைத் தங்களது உரிமை என்கிறார்கள் அதனை எதிர்ப்போர்! இன்னொரு பக்கம் தடுப்பூசி தான் ஒரே வழி என்கிறது உலக சுகாதார நிறுவனம்.
அது பற்றி நாம் கவலைப்பட வேண்டாம். நமக்குத் தெரிந்த ஒரே வழி என்பது தடுப்பூசி மட்டும் தான். அது மட்டும் தான் நம்மைக் காப்பாற்றும். ஓமிக்ரோன் என்பது வெகு விரைவில் பரவக்கூடிய கொரோனாவின் திரிபு என்கின்றனர் டாக்டர்கள். விரைவில் பரவக்கூடியது என்பதைத் தவிர பெரிய ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது அல்ல என்று சொல்லப்படுகிறது.
நேர்மறையோ எதிர்மறையோ எதைச் சொன்னாலும் நம்புவோம். அப்படியா? என்பதோடு சரி! அரசாங்கம் சொல்லுவதை ஏற்று நமது வேலைகளை நாம் கவனிப்போம். பயப்படுவதால் ஆகப்போவது ஒன்றுமில்லை! வழக்கம் போல நாம் செயல்படுவோம்! நமது வேலைகளை நாம் கவனிப்போம்!
ஓமிக்ரோன் பெரிய அளவில் பரவாது என நம்புவோம்! அதோடு கோவிட்-19 பரவாமல் இருக்க என்ன செய்தோமோ அதையே தொடர்ந்து கடைப்பிடிப்போம்! நமது கடமைகளை நாம் செய்வோம். அதற்கு மேலே.......! கடவளிடம் ஒப்படைத்து விடுவோம்!
No comments:
Post a Comment