Tuesday 10 August 2021

தங்கத்தை அள்ளும் சீனர்கள்!

 இப்போது தோக்கியோவில் நடைப்பெற்று வரும் 2020 ஒலிம்பிக் போட்டியில் சீனர்கள் தங்க பதக்கங்களை வாரிக் குவிக்கின்றனர் என்பதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்.

கடைசியில் ஒரு தங்கப்பதக்க வித்தியாசத்தில் சீனா அமெரிக்காவிடம் தோல்வி கண்டது! ஆம்!  அமெரிக்காவிற்கு 39 தங்கப்பதக்கங்களும் சீனாவிற்கு 38 தங்கப்பதக்கங்களும் கடைசி நாள்  மாற்றமாக அமைந்தது விட்டது.  அதுவரை தங்கப்பதக்கங்களை வாரிக் குவித்தவர்கள் சீனர்கள் தான்.

ஆனால் சீனர்கள் இந்தத் தோல்வியைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள் என நம்பலாம். அடுத்த 2024 ஒலிம்பிக் போட்டிக்கான பயிற்சிகளை இந்நேரம் துவங்கியிருப்பார்கள். அது அவர்களுக்குத் தன்மான  பிரச்சனை.

உலகையே  தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நினைப்பவர்கள் சீனர்கள். பல நாடுகள் இன்று அவர்களது கட்டுப்பாட்டில். பணத்தைக் கடனாகக்  கொடுத்தே நாடுகளைப் பிடிப்பவர்கள்!  தமிழ்ச் சினிமா படங்களில் நாம் பார்ப்போமே அதாவது பணம் உள்ளவன் ஏழைகளுக்கு உதவி செய்வது போல பணத்தைக் கொடுத்து கடைசியில் அவனது நிலங்களை அப்படியே கபளீகரம் செய்துவிடுவானே அதே பாணி ஆனால் இது உலக அளவில்! இப்படியே அவர்கள் பல நாடுகளைத் தங்களுக்கு அடிமைகளாக வைத்திருக்கிறார்கள்!

அப்படிப்பட்டவர்கள் அவ்வளவு சீக்கிரத்தில் அமெரிக்காவிற்கு அடிபணிந்து விடுவார்களா? அடுத்த ஒலிம்பிக் விளையாட்டை இந்நேரம் ஆரம்பித்திருப்பார்கள். 

சீனாவிற்குப் பல விஷயங்கள் அவர்களுக்குச் சாதகமாக இருக்கின்றன. அவர்கள் ஒரே இனம். ஒரே மொழி. அவர்களிடம் மத பாகுபாடு இல்லை. கறுப்பன் வெள்ளையன் பிரச்சனைகள் இல்லை. கிறிஸ்துவன், இஸ்லாமியன், புத்தன்,  இந்து போன்ற பிரச்சனைகள் இல்லை. உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி பிரச்சனைகள் இல்லை, தங்கப்பதக்கம் வேண்டும் ஆனால் அதனைப் பெறுபவன் இந்துவாக இருக்க வேண்டும், இஸ்லாமியனாக இருக்க வேண்டும் என்கிற மதம்  இல்லை! இதுபோன்ற பிரச்சனைகள் தில்லாத நாடு சீனா. இது போன்ற பிரச்சனைகள் வந்தால் அப்போதே அந்தப் பிரச்சனைக்குச்  சமாதி கட்டிவிடுவார்கள்!

இன்றைய அளவில் அமெரிக்கா முன்னணியில் இருக்கக் காரணம் அங்கே கருப்பன், வெள்ளையன், கிறிஸ்துவன், இஸ்லாமியன் என்று பதரப்பட்டவர்கள் விளையாட்டுக்கு என்றே தங்களை அர்ப்பணித்தவர்களாக இருக்கின்றனர். விளையாட்டாளர்களிடையே அர்ப்பணிப்பு உணர்வு இருக்கிறது.  பல நாடுகளுக்கு அது இல்லை.  அக்கறையும் இல்லை!

அடுத்து அடுத்து வரும் ஒலிம்பிக் போட்டிகளில் சீனா முதலாவதாகவர கடும் போட்டியை அமெரிக்காவிற்குக் கொடுக்கும் என நம்பலாம். சீனர்களைப் பொறுத்தவரை எல்லாத் துறைகளிலும் முதலாவதக இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தோடு அவர்கள் போட்டிப் போடுகின்றனர்.

மீண்டும்  தங்கத்தை அள்ளுவார்களா? அடுத்த ஒலிம்பிக் தான் பதில் சொல்ல வேண்டும்!


No comments:

Post a Comment