Sunday 15 August 2021

அன்வாரே நமது தேர்வு!

 நமக்குப் பிரதமரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் இருந்தால் அது அன்வார் இப்ராகிமாகத்தான் இருக்க முடியும்!

பிரச்சனை,  அது நம் கையில் இல்லையே! எங்கே போய் முட்டிக் கொள்வது? ஆனால் ஒரு சில விஷயங்கள் மன்னரால் மட்டுமே முடியும். அதையும் சொல்லி வைக்கிறோம். 

அன்வார் தான் வரவேண்டும் என்று சொல்லுவதில் ஒரு நியாயம் உண்டு. சமீப காலங்களாக, முகைதீன் பதவியேற்ற பின்னர் ஏற்பட்ட மாற்றங்கள், என்ன என்ன நடந்தன என்பது நம் கண்முன்னே நிற்கிறது.

கட்சி மாற, பதவிகள் பேரம் பேச, பணம் தண்ணீராய் வாரி இறைக்கப்பட்டது! கோடிகள் கை மாறின! முகைதீன் கடைசி நிமிடம் வரை தனது கொள்கைகளை விட்டுக் கொடுத்தாலும் தனது கோடிகைகளை அவர் விட்டுக் கொடுக்கவில்லை! ஆனாலும் சில பல கோடிகள் பேரம் பேசப்பட்டாலும் கடைசியில் வாங்க ஆளில்லாத சூழல் ஏற்பட்டுவிட்டதால்  தான் முகைதீன் பின் வாங்கினார்! கோடிகள் அவருக்கு உதவவில்லை! அதனால் தான் இந்த கடைசி நேர மாற்றம்! கோடியேறவில்லை!

ஆனாலும், எந்த நிலையிலும்,  அனவார் தனது கொள்கைகளை விட்டுக் கொடுக்கவில்லை. கோடிகளை உதறித்தள்ளியவர் அவர். பதவிகளைக் கண்டு தடுமாறவில்லை அவர்!

தான் கொண்ட கொள்கை ஒன்று தான். நீதி, நேர்மை - அதைத் தவிர வேறு கொள்கை அவருக்கில்லை. அரசியல்வாதிகளுக்கு அது தீண்ட தகாத வார்த்தைகள் டாக்டர் மகாதிர் உள்பட! அதனாலேயே அவர் ஓரங்கட்டப்பட்டார்! இன்னும் ஒரங்கட்டப்படுகிறார்!

கடைசி நேர மாற்றங்கள் என்ன என்ன நடக்கும் என்று சொல்வதறகில்லை! அது தான் அரசியல். நேற்றைய வில்லன் இன்றைய ஹீரோ ஆகிவிடுவான்! இன்றைய ஹீரோ,  நாளைய வில்லானாகி விடுவான்! எதிரி நண்பனாகி விடுவான். நண்பன் எதிரியாகி விடுவான்! அது தான் அரசியல். அரசியலில் நிரந்தர எதிரியுமில்லை நிரந்தர நண்பனுமில்லை! ஆமாம், அயோக்கியனுக்கு எது நிரந்தரமாக இருக்க முடியும்? 

நாட்டுக்கு நல்லது நடக்க அன்வார் தான் நமது தேர்வு!  

No comments:

Post a Comment