கோவிட்-19 என்கிற கொடிய நோய் நம்மை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிற நேரம். தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் நேரம். மக்களுக்கு வேலை இல்லை. வருமானம் இல்லை.
B40 என்னும் குறைவான வருமானம் பெரும் மக்கள் இப்போது பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் வேலை செய்து பிழைப்பவர்கள். வேலைக்குப் போனால் சம்பளம். இந்தக் கொரோனா காலத்தில் வேலை இல்லை. சம்பளம் இல்லை.
இவர்களைப் போன்ற சூழலில் தான் பெரும்பாலான மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களின் சூழலை நாம் பார்க்கின்ற போது நமது மகிழ்ச்சியும் போய்விடுகிறது.
கௌரவமாக வேலை செய்து பிழைப்பு நடத்தியவர்கள், தங்களது குடும்பத்தைக் காப்பாற்றியவர்கள், இப்போது வீடு இல்லை, வேலை இல்லை, வருமானம் இல்லை, குடிக்கக் கஞ்சி இல்லை - இப்படி ஒர் அவல நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர்.
சுதந்திரத்தின் மகிழ்ச்சியை மக்கள் முகத்தில் பார்க்க முடியவில்லை. என்றைக்கு வேலைக்குப் போவோம், பணம் சம்பாதிப்போம், குடும்பத்தைக் காப்பாற்றுவோம் என்கிற எண்ணம் தான் மனதில் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது.
அரசாங்கத்தால் மக்களுக்கு வழிகாட்ட முடியவில்லை.
இந்த ஆண்டு சுதந்திர தினம் நமக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. அமைதி காப்போம். அடுத்த ஆண்டு சுதிந்திர தினம் புதிய விடியலைக் கொண்டுவரும் என எதிர்பார்ப்போம்.
வாழ்க மலேசியா!
No comments:
Post a Comment