Friday 20 August 2021

அடுத்த பிரதமர் யார்?

தேசிய முன்னணியின் பிரதமர் வேட்பாளர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அடுத்த நாட்டின் 9-வது பிரதமராக வருவார் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

அவருக்கான ஆதரவே அதிகம் என்பதாகக் கணிக்கப்படுகிறது. 

இன்று வெள்ளிக்கிழமை  பிற்பகல் 2.30 மணி அளவில்  அரண்மனை விடுத்த ஓர்  அறிக்கையின் மூலம் இஸ்மாயில் சப்ரி யாக்கோப், பிரதமராக பேரரசரால்  தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்பதாகக் கூறியது.

அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களின்  தேர்வாக  அவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

பேரரசர் விடுத்த அறிக்கையில் இஸ்மாயில் சப்ரி  பிரதமராக நியமனம்  செய்யப்பட்டிருக்கிறார் என்று கூறுகிறது.

அதன்படி நியமனம் என்று சொல்லும் போது  அது பல பிரச்சனைமளைத் தவிர்க்கும் என்று நம்பலாம்.  அதாவது நம்பிக்கை வாக்கெடுப்பு, நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு போன்ற பிரச்சனைகள் எழாது என்று நம்பலாம்.

இங்கு அவரது திறமை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அடுத்த தேர்தல் வரை அவரே பிரதமராக இருப்பார். அதே சமயத்தில் தனது கட்சிக்காரர்களுக்கு அந்த சலுகை, இந்த சலுகை என்று பெயரைக் கெடுத்துக் கொள்ளாமல் இருந்தால் உத்தமம்.

அப்படிச் செய்தால், கட்சிக்காரர்களுக்குச் சலுகை என்று போனால், கடைசியில் முகைதீன் யாசினுக்கு ஏற்பட்ட கதி தான் இவருக்கும் ஏற்படும். அதன் பின் பேரரசரின் நியமனத்திற்கும்  மரியாதை இல்லாமல் போய்விடும். மரியாதையைக் காப்பாற்றிக் கொள்வது அவரது கடமை.

இனி நாட்டின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவேண்டியவர் அவர். நாடாளுமன்றத்தில் பிக்கல் பிடுங்கள் இல்லாமல் அவர் ஆட்சி நடத்தலாம். தவறு செய்தால்  அவருக்குத்தான் நட்டம்.

அடுத்த தேர்தல் வரும்வரை அவரது திறமையை அவர் காட்ட வேண்டும்! வாழ்த்துகிறோம்!

                                                                                                                                     

No comments:

Post a Comment