Friday 13 August 2021

சரியான பாதையில் சபா மாநிலம்

 கோவிட்-19 தொற்று மிகப் பெரிய அளவில் பரவ காரணமான சபா மாநிலம் இப்போது சரியான பாதையில் செல்கின்றதாகவே நமக்குத் தோன்றுகிறது.

உணவகங்கள் திறக்கப்பட்டு விட்டன. அது நல்ல செய்தி. ஆனால் ஒரு சில கட்டுப்பாடுகள்  உண்டு.  அமர்ந்து சாப்பிட நினைக்கும் வாடிக்கையாளர்கள் தடுப்பூசி போட்டவர்களாக இருக்க  வேண்டும்.  மற்றும்,  தொற்று குறைவானப் பகுதிகளில் மட்டுமே வாடிக்கையாளர்கள் உணவகங்களில் அனுமதிக்கப்படுவர். அவர்களும் தடுப்பூசி போட்டவர்களாக இருக்க வேண்டும்.

இது ஒரு நல்ல முயற்சி.  சுகாதார அமைச்சு சொல்லுகிறதோ, சொல்லவில்லையோ உணவகங்கள்  தங்களுக்கு எது நல்லதோ, எது தங்களுக்குப் பாதுகாப்பாக இருக்குமோ அதைத்தான் செய்ய வேண்டும். சுகதார அமைச்சு ஆயிரம் சொல்லலாம் ஆனால் களத்தில் உள்ளவர்கள் தான் அது சரியா என்பதைத் தீர்மானிக்கும் நிலையில் உள்ளனர்.

இன்று நாட்டில் தொற்று அதிகம்  பரப்பப்படும் இடம் என்றால் அது தொழிற்சாலைகளும், உணவகங்களும் தான். தொழிற்சாலைகள் திறக்கப்பட வேண்டும் என்பது முதலாளிகளின் எதிர்ப்பார்ப்பு. ஆனால் அதற்கு ஏற்றவாறு தங்களைத் தயார்படுத்திக் கொண்டார்களா என்பது தான் பிரச்சனை. வேலை செய்யும் அனைவரும், முதலாளிகள் உட்பட, தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். போட்டிருந்தால்  இந்த அளவுக்கு நோய் அதிகரிக்க அவசியமில்லை.  தொழிற்சாலைகள் தான் அதிகளவில் தொற்று பரப்பும் இடங்களாக மாறிவிட்டன!

அப்படித்தான் சுகாதார அமைச்சின் அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன? அது தெரிந்தும் ஏன் அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதும் சரியான கேளவி தானே?

தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்கள் பெரும்பாலும் ஆண்கள். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் சுகாதார அமைச்சின் புள்ளி விபரங்கள் என்ன கூறுகின்றன?  தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் பெண்களும், வயதானவர்களுமே அதிகமாக இருப்பதாக அவர்களின் புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

அப்படியென்றால் ஆண்களின் பங்கு குறைவாக இருப்பதாகத் தெரிகிறது. அவர்கள் தான் தொழிற்சாலைகளில் அதிகம் பணி புரிகின்றனர். இது யாருடைய குற்றம்  என்ற பார்த்தால் முதலாளிகள் தான் குற்றவாளியாகின்றனர்!  அவர்களின்  பணி முதலாளிகளுக்குத் தேவையாக இருக்கின்றது. அதனால் அவர்கள் தடுப்பூசி போட அனுமதி கொடுப்பதில்லை!

என்ன செய்யலாம்? தடுப்பூசியைத் தொழிற்சாலைகளுக்கே  கொண்டு வரவேண்டும்! அதற்கும் முதலாளிகள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்! காரணம் எல்லாரும் ஒரே சமயத்தில் நோய் விடுப்பு  எடுக்க நேரிடும்! நூறு விழுக்காடு இல்லையென்றாலும் அது சாத்தியமே!

இன்று சிலாங்கூர் மாநிலத்தில் தான் அதிகம் கொரோனா தொற்று தொற்சாலைகளிலிருந்து வருகின்றன.

சபா போன்ற மாநிலங்கள் எப்படி தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கின்றனவோ அதே போன்று மற்ற மாநிலங்களும் எடுக்க வேண்டும்.

நாம் எல்லாக் காலங்களிலும் தொற்றோடு வாழ முடியாது! அதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்!

No comments:

Post a Comment