Wednesday 18 August 2021

வீடு வாங்கலையோ, வீடு!

 நிலைமை அந்த அளவுக்கு மோசாமாகிவிட்டது!

தரமில்லாத  வீடுகளைக் கட்டி, தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப விலைகளை ஏற்றி, பொது மக்களை ஏமாற்றி வந்த  வீட்டு விற்பனை நிறுவனங்கள் இப்போது செய்வதறியாது விழிபிதுங்கி நிற்கின்றன!

நாட்டில எல்லா ஏமாற்று  வேலைகளை விட இவர்களின் ஏமாற்று வேலைகள் தான் அதிகம். சுமார் ஆறு இலட்சம் வெள்ளி போட்டு வீடு வாங்கினால், தரமற்ற அந்த வீட்டுக்கு, மேலும் ஒரு இலட்சம் போட்டு நாம் செலவு செய்ய வேண்டியிருக்கிறது! 

இது தான் இவர்கள் வீடு கட்டும் இலட்சணம். பணம் போட்டு வாங்கியவர்களின் வயிற்றெரிச்சலும் சாபமும் இந்தத்  துறையினருக்கு மற்ற துறையினரை விட  அதிகம்!

என்ன ஆயிற்று? ஆமாம், இப்போது வீடுகள் வாங்க ஆளில்லாத நிலைமை. கோவிட்-19 தொற்றுக்குப் பின்னர் நிலைமை மாறிவிட்டது. மக்கள் வேலை இல்லாத நிலையில்  வயிற்றைப்பாட்டைப்  பார்ப்பார்களா அல்லது வீடு வாங்கப் பார்ப்பார்களா? அப்படியே நினைத்தாலும் வங்கிகள் கடன் கொடுத்து விடுமா?

இந்த நிலையில் வீடு வாங்க ஆளில்லை! கடன் கொடுக்க வங்கிகள் தயாராக இல்லை. பெரும்பாலான மலேசியர்கள் வங்கிகள் கொடுக்கும் கடனில் தான் வீடுகளை வாங்குகின்றனர். யாரும் ரோக்கப் பணம் கையில் வைத்துக் கொண்டு வீடுகள்  வாங்குவதில்லை.

அதனால்?   வீடமைப்பு நிறுவனங்கள் மிகவும் தாழ்நிலை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றன! அவர்களும் வங்கிக்கடனில் தான் தங்களது தொழிலை செய்கின்றனர். எல்லா வகையிலும் பாதிப்பு.

இப்போதைய நிலையில் அவர்கள் ஐம்பது விழுக்காடு வீட்டு விலைகளைக் குறைத்திருக்கின்றனர். வாங்க! வாங்க! என்று கூவிக் கூவி வீடுகளைக் விற்கின்றனர்!  ஆனாலும் வாங்க ஆளில்லை. ஏன்? வேலை இல்லை. சம்பாத்தியம் இல்லை. யார் வாங்குவார்?

இந்த நிலையில் தான் வீடமைப்புத் துறையினர் இப்போது குறைந்த விலையில் வீடுகள் விற்க தயாராகி வருகின்றனர்! ஆனாலும், குறைத்தாலும், எல்லாரும் கப்சிப் என்று இருக்கின்றனர். யார் என்ன செய்ய முடியும்.

நாடே வீழ்ந்து கிடக்கிறது! தூக்கிவிட ஆளில்லை! மக்களோ இருக்கிற வீட்டை விற்கிற நிலைமை. வாங்க ஆளில்லை!

எப்போது நல்ல செய்தி வருமோ, பார்க்கலாம்!

No comments:

Post a Comment