சென்ற தோக்யோ 2020 போட்டிகளில் கலந்து கொண்டவர்களில் இந்திய ஹாக்கி மகளிர் அணியினரும் அடங்குவர்.
அவர்கள் எந்த ஒரு பதக்கத்தையும் பெற முடியவில்லை என்றாலும் அவர்கள் ஆடிய ஆட்டம் சிறப்பாகவே அமைந்தது. அதுவும் ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து 1-0 கோல்கணக்கில் வெற்றி பெற்று அதிர்ச்சியை ஏற்படுத்தினர். அதன் மூலம் மகளிர் அணியினர் அரையிறுதி ஆட்டத்திற்குத் தகுதி பெற்றனர்.
வந்தனா கட்டாரியா, மிகவும் தேர்ச்சி பெற்ற ஹாக்கி விளையாட்டாளர். பல சர்வதேச ஹாக்கி போட்டிகளில் பங்கு பெற்ற வீராங்கனை. பல விளையாட்டுகளில் கோல்கள் அடித்து இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தவர்.
அவரது அணியினர் அர்ஜெண்டினாவுடன் ஆடிய ஆட்டத்தில் தோல்வியுற்றனர். தோல்வி வருத்தத்தைக் கொடுத்தாலும் ஒரு சிலருக்கு அதுவே கேலி, கிண்டல், மகிழ்ச்சியாக, நடனமாடி ஜாதி விஷத்தைக் கக்கியிருக்கின்றனர்.
இந்தியா, உத்திரகாண்ட் மாநிலத்தில் ரோஷனாபாதில் உள்ள அவரது வீட்டின்முன் உயர்சாதியினர் சிலர் பட்டாசு கொளுத்தி வந்தானாவின் குடும்பத்தினரைக் கேவலமாகப் பேசி உள்ளனர். "நீ ஒரு தலித் பெண். உன்னால் தான் இந்திய அணி தோற்றது!" என்று அசிங்கமாகப் பேசி வந்தானாவையும் வாய்க்கு வந்தபடி திட்டியிருக்கின்றனர். ஆனால் அந்தத் தற்குறிகளுக்கு ஒன்று தெரியவில்லை. அந்த அணியில் இன்னும் பல தலித் விளையாட்டளர்கள் இருக்கிறார்கள் என்பது.
இருந்தாலும் அது பற்றியெல்லாம் வந்தனா கோபப்படவில்லை. சூரியனைப் பார்த்து நாய்கள் குரைப்பது இயற்கை தானே!
ஆனால் இந்தியாவின் ஒலிம்பிக் மன்றம் இது பற்றி எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. அக்கறை காட்டியதாகவும் தெரியவில்லை. காரணம் ஒலிம்பிக் மன்றம் உயர்சாதியினரைக் கொண்ட ஒர் அமைப்பு. ஒலிம்பிக் விளையாட்டுக்களில் பங்கு பெறுபவர்கள் உயர்சாதியினராகத் தான் இருக்க வேண்டும் என்கிற கொள்கை உடையவர்கள். இந்திய நாட்டின் மக்கள் தொகையில் மூன்றே விழுக்காடு உள்ள அவர்கள் நாட்டையே தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் போது ஒலிம்பிக் மன்றம் எந்த மூலை! அதுவும் அவர்கள் பிள்ளைகள் கல்வி கற்றதும் அமெரிக்காவுக்கு, இங்கிலாந்துக்கும் சென்றுவிடுகிறார்கள். அப்படியிருக்க அவர்கள் எப்படி ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெற முடியும்? ஆனாலும் அவர்கள் தான் முன்னணியில் இருக்க வேண்டுமாம்! தற்குறிகள் என்பதில் சந்தேகமில்லை!
இப்போது ஒன்று புரிந்திருக்க வேண்டும். இந்தியா ஏன் எல்லாக் காலங்களிலும் ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெற முடியவில்லை என்பது!
இது தொடரத்தான் செய்யும்!
No comments:
Post a Comment